Pages


Thursday, March 10, 2011

360 டிகிரி கோணத்தில் புகைப்படம்


360 டிகிரி -  
ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம்.
360 டிகிரி புகைப்படங்கள்
இந்த புகைப்படங்கள் நாம் நேரில் சென்று அந்த இடத்தினைப் பார்ப்பதைப் போன்ற உணர்வு தருபவை. நாம் சுற்றிப் பார்க்கின்ற உணர்வை தரும் வகையில் இருப்பதோடு, பெரியதாகவும் சிறியதாகவும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்முடைய எண்ணப்படி இடது வலது என்றும், மேலும் கீழும் பார்க்க முடியும். ஏறத்தால ஒரு காணொளி போன்று இருக்கும். சில புகைப்படங்கள் ஒலி வடிவ பாடல்களையும் தகவல்களையும் சேர்த்தே வைத்திருக்கின்றன.
உதவும் கருவிகள்
மேலே காணும் புகைப்படம் எடுக்கும் கருவிகள், ஒரே சமயத்தில் 360 டிகிரிக்கும் புகைப்படங்களை எடுத்துவிடுகின்றன. இந்த கருவிகள் இல்லாமலும் 360 டிகிரி புகைப்படத்தினை உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்கள் பயன்படுகின்றன.
இலவச மென்பொருள்
360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை உருவாக்க இலவச மென்பொருள் ஒன்று உதவுகிறது. அதன் பெயர் Instant Pano என்பதாகும்.

No comments:

Post a Comment