Pages


Wednesday, March 16, 2011

லிபேர் ஆபிஸ்(Libre Office) மென்பொருள் திறந்த நிலை மென்பொருள் குறித்த கட்டுரை

நண்பர்களே நம் அனைவரும் விண்டோஸில் வேர்டு, எக்ஸல், பவர் பாய்ண்ட் போன்ற கோப்புகளை திறக்க மற்றும் எடிட் செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேண்டும்.   மைக்ரோசாப்ட் ஆபிஸ் எல்லாருமே உபயோகிக்கிறார்கள்.  ஆனால் காசு கொடுத்து வாங்கி அல்ல இணையத்தில் இருந்து திருடியும், இன்னொருவர் வாங்கிய உரிமையை இவர்களும் உபயோகபடுத்திக் கொள்கிறார்கள்.  இவ்வாறு இணையத்தில் இருந்து ட்ரையல் வெர்சன் மற்றும் திருட்டு மென்பொருளை நிறுவுவதால் வைரஸ் மற்றும் நச்சு மென்பொருட்கள் வர வாய்ப்பு உண்டு.  இது மாதிரி திருட்டு மென்பொருளை உபயோகிப்பதை விட திறநத நிலை மென்பொருட்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. 


அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள்  லிபர் ஆபிஸ் இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருள் இதுவரை பீட்டா என்னும் சோதனை பதிப்பாகவே இருந்து வந்தது.  இப்பொழுது இந்த மென்பொருளின்  சோதனை பதிப்பு முடிந்து Stable என்னும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த Stable பதிப்பு வெர்சன் Libre Office 3.3.0 என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளில் வேர்ட் ப்ரோஸசர், ஸ்ப்ரெட்சீட்,  ப்ரசண்டேசன் மேனேஜர், சார்ட், டைக்ராம் வரையவும் முடியும். ODBC என்னும் டேட்டாபேஸ்களை இணைக்கவும் முடியும் என்பது சிறப்பம்சம்

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம்.  Click செய்யவும்  

இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும்  என்பது இதன் சிறப்பு.    


இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு.  ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.


லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.  அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம்.  நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது.  இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம். 

இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம்.   அல்லது டொரண்ட் வழியாகவும்  தரவிறக்கலாம்.  அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.

லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க  Click செய்யவும்

லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க  Click செய்யவும்

டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.

பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது.  அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )



இஅசூஸ் பார்டிசன் மென்பொருள் போலவே இன்னொரு மென்பொருள் Aomei Partition Assistant Professional Edition  இந்த மென்பொருள் இன்று வரை (28-01-2011)இலவசமாக வழங்கப்படுகிறது.  தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.  சுட்டி
 

நண்பர் வேலன் அவர்கள்  500 பதிவை எட்டியிருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  என்னுடைய அடுத்த பதிவு 400 வது பதிவு நேரம் இல்லாததால் குறைவாகவே எழுதுகிறேன்.   உங்கள் ஆதரவு மட்டுமே என்னை மேன்மேலும் உயர்த்துகிறது.

ஒரே Site il அனைத்து அரட்டைத் தளங்களும்(Chat sites)..


 இன்றைய உலகில் நாளுக்கு நாள் பல புதிய சோசியல் தளங்கள் அறிமுகமாகி  வருகிறது.  அதிலும் அரட்டை தளங்கள் ஆன யாஹூ messenger ,  google டாக், msn ,  facebook மற்றும் பல இதில் நமது நண்பர் ஏதாவது ஒரு சமூகத்தளத்தில் இருக்கும்போது,  நாம் வேறொரு சமூகத்தளத்தில் online  இல்  இருப்போம்.   இருவரும் ஒரே சமுக தளத்தில் online இருந்தால்தான் chat பண்ண முடியும்.   ஏதாவது ஒரு சமூகத்தளத்தின் முகவரி, கடவுச்சொல் என்பன கொடுத்து உள் நுழைந்தால் போதும் உமது நண்பர்  எந்த சமூகத்தளத்தில் online  இருந்தாலும், அரட்டை அடித்துக் கொள்ளலாம்.

To go to the site
 Click Here 

பல தேடு பொறிகள் (MORE SEARCH ENGINES IN SINGLE SITE)..



 
தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.
இதற்காக நாம் ஒவ்வொறு தளமாக சென்று தேட வேண்டாம். ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே பல தளங்களின் முடிவுகளை இந்த தளம் கொடுக்கிறது.

7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகுள், யாகூ, ஆஸ்க், விக்கிப்பிடியா, அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப், அமேசான் போன்ற அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு உதவி செய்கிறது.
இந்த தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்ததும், தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும்.
இதிலிருந்து நாம் எந்த தளத்தில் தேட வேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். தேடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்த தளம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 

TO GO TO MORE SEARCH ENGINES IN A SINGLE SITE CLICK BELOW:

நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு.!

இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணணியின் செயல்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையாக அல்லது ஞாபகமறதியாலோ நம் கணணியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணணி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். வாரம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆகவேண்டும் என நினைத்தால் கீழே உள்ள Every week on என்பதில் க்ளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.
கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட Shortcut key செட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணணியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை. நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
 
 Download  செய்ய