Pages


Tuesday, December 28, 2010

அழியா அசைவுகள்

* என்னவளே!...
   என்னமோ தெரியவில்லை
   எனக்கு உன்னிடம்
   அத்துனையும் பிடித்துவிட்டது
   அப்படியே...

* அன்பே!...
   அன்றொருநாள் எனக்கோர்
   அழைப்பு வந்தபோது,
   ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர்
   அழகான மங்கையோடு
   அதன்பின்தான் நானறிந்தேன்
   அவள் என்னன்னை எனக்காகப்
   பார்த்த பெண் நீ என்று..
 
*அழகே!...
    இன்றும் புரியவில்லையெனக்கு
    என் அகத்தை தொட்டது
    உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
    உன் பரிவான அந்த பாசமா?

Wednesday, December 22, 2010

தத்துவம்

செய்!


ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார்.

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார்.

இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும். 
************************************************************************************************
ஊக்கம்

ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.செய்வன திருந்தச் செய்.
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
பதறாத காரியம் சிதறாது.பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
************************************************************************************************ 

Monday, December 13, 2010

தலைவர்களின் குரல்

முதல் படி


உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz