Pages


Thursday, January 27, 2011

வாழ்வில் ஜெயித்துக் காட்ட!





வெற்றிப்படிகளில்
முதல் அடியை
எடுத்து வையுங்கள்.
இன்றே!

உங்களால் முடியும் !

1)தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
-ஆபிரஹாம் லிங்கன்.

2)சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
- கன்பூசியஸ்.


3)தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது!
-தாமஸ் ஆல்வா எடிசன்.

4)தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
-எமர்சன்.

5)வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள் சிக்கனம், சேமிப்பு.
- ஹெர்பெர்ட்.

Wednesday, January 26, 2011

விடியல் உன்கையில் !!!

இறவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார்
விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம்
விரித்து காத்திருக்கும்.
உழைப்பெனும் உளி கொண்டு
செத்துக்கிப்பார்-உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காச்சியிளிப்பாள்
உன் வெற்றி தேவதை
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்
கற்கள் கால்களை பதம் பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை
மனிதா
நீயும் கடிவாளாம் கட்டிய குதிரையாய்-ஓடிப்பார்
உன் இலச்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்