Pages


Sunday, March 13, 2011

பறக்கும் கார்


கார் என்பதை சொகுசு உந்தி, சிற்றூர்தி என்றெல்லாம் தமிழ்ப்படுத்தலாம். ஆனால் வழக்கத்தில் இல்லாததால் பலரும் நான் காரைதான் குறிப்பிடுகின்றேன் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். வானில் பறந்து செல்லும் மேகங்களை குறிக்க கார் என்ற தமிழ்சொல் உண்டு. இப்போது அதே சொல்லைக் கொண்டே காரை கார் என அழைக்கலாம். காரணம் இப்போது மேகம் போல காரும் பறக்கிறது. உங்களில் சிலருக்கு இந்த விசயம் தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் அறிந்து கொள்வதற்காக இது.

பறக்கும் சிற்றூர்தி -
மனிதன் பறவை பறப்பதை கண்டு அது போல் தானும் பறக்கவேண்டும் என மோகம் கொண்டு அடைந்த துயரங்கள் ஏராளம். பறவையில் இறகுகளை ஒட்டவைத்து செயற்கை சிறகுகள் செய்து, மலை உச்சியிலிருந்து கீழே பலர் விழுந்திருக்கின்றார்கள். அதில் சிலர் உயிரையும் துறந்திருக்கின்றார்கள். இப்படி பல நூற்றாண்டுகளாக முயன்ற அந்த முயற்சி, எத்தனையோ இழப்புகளுக்கு பின் ரைட் சகோதரர்களுக்கு சாத்தியப்பட்டது. தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் விமானத்துறை பல்வேறு பரினாமங்களை கண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த பறக்கும் சிற்றூர்தி.
இதனை பிளையிங் கார் என்றும் ரோடபுள் ஏர்கிராப்ட் என்றும் அழைக்கின்றார்கள். இதனுடைய வரலாறும் ரைட் சகோதரர்களிடமிருந்தே தொடங்குகிறது. ஹென்றி போர்ட், வாட்டர்மேன் என முயற்சிகள் தொடர்ந்து, இப்போது பல்வேறு வடிவங்களில் இது சாத்தியப்பட்டிருக்கிறது.
மார்வெரிக் பிளையிங் கார் -

டெராபிஜியா டிரான்சிஷன் -

இந்தக் கார்கள் சிறிது தூரம் சென்று விமானம் போலவே பறக்கின்றன. இன்னும் நின்ற இடத்திலிருந்தே பறக்கும் சிற்றூர்திகளை கண்டுபிடித்தால் டிராபிக் பிரச்சனை சாலையில் இருக்காது. காணொளியில் கண்டு ரசியுங்கள்.
படகு சிற்றூர்தி -

பறக்கும் காரை விட என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது இந்த கார்தான். G.T.A (Grand Theft Auto) என்ற கணினி விளையாட்டில் தில்லுமுல்லு செய்து காரை தண்ணீரில் ஓட வைக்க முடியும். சாலையில் ஓட்டிக்கொண்டிருக்கும் காரை அப்படியே தண்ணீரில் கொண்டு செலுத்தும் போது, மகிழ்வாக இருக்கும். நடைமுறையில் இது சாத்தியப்பட்டால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்த்துண்டு. அதை இப்போது செய்து காட்டியிருக்கின்றார்கள். பைத்தான், காடோர் என்ற இரண்டு வடிவங்களில் இந்த கார்கள் விற்பனைக்கு வருகின்றன. உங்களுக்கு வேண்டுமானால் இங்கு சொடுக்கி பதிவு செய்து கொள்ளுங்கள்.
இந்தக் காணொளியில் கொஞ்சம் தாராள மனதுடன் பெண்கள் இருப்பதால் பிடிக்காத நண்பர்கள், தவிர்த்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment