Pages


Tuesday, December 28, 2010

அழியா அசைவுகள்

* என்னவளே!...
   என்னமோ தெரியவில்லை
   எனக்கு உன்னிடம்
   அத்துனையும் பிடித்துவிட்டது
   அப்படியே...

* அன்பே!...
   அன்றொருநாள் எனக்கோர்
   அழைப்பு வந்தபோது,
   ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர்
   அழகான மங்கையோடு
   அதன்பின்தான் நானறிந்தேன்
   அவள் என்னன்னை எனக்காகப்
   பார்த்த பெண் நீ என்று..
 
*அழகே!...
    இன்றும் புரியவில்லையெனக்கு
    என் அகத்தை தொட்டது
    உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
    உன் பரிவான அந்த பாசமா?


*அமுதே!...
   அன்றாடம்
   அழைப்புகள் பல வருமெனினும் கூட‌
   ஆனந்தமாய் அகமகிழ்வதேனோ உன்
   அழைப்பு வந்தபின்புதான்..

*உறவே!...
   உன் வார்தைகளையே  கேட்டு
   உனை பரிச்சயமான நான்
   உனை பெண்பார்க்க வந்தபின்புதான்
   உணர்ந்தேன் என் தாய்
   உனை அழகி என்று
   உளமுருகி கூறியது அப்படியே
   உண்மையென்று..
   தைரியம்தான்யேனோ தயங்கிவிட என்னிடம்
   தயக்கம் மட்டும் தாராளமாய்
   தனியாய் நீ என்னருகில்
   அன்று அழகாய்
   அடக்கமாய் அமர்ந்திருக்க..

*என்னவளே!..
   என்
   புறழகேனோ உனை
   பூரிப்படையச் செயவிலையெனினும் எனை
   மணமுடிக்க ஏற்றுக்கொண்டாயே
   மங்கை நீ என்
   மன அழகையே மதிபதாலேனோ...

*நறுமுகையே!..
   நம் இருவருக்கும் ஏனோ
   நமை இணைந்தே பிடிதுவிட‌
   நம் வீட்டாருக்கோ
   நமக்கு முன்னே பிடித்துவிட‌
   நானேனோ நம்பமுடியாமல்..

*உயிரே!..
   உனை மணமுடிக்க‌
   மாதங்கள் பலயிருக்க நம்
  அழைப்பு மட்டும்
  அயாராமல் அனுதினமும் அதில்
   மோகம் பல நாள்
   கோபம் சிலநாள்
   அழுகையும் கூட‌
   அப்படியும் இப்படியுமாய் ஆனால்
   காதல் மட்டும் கடைசிவரை..

*கலையே!..
   காலமும் கைகூடிவர‌
   காதலோடு உன்கைபிடித்து
   கட்டினேன் தாலியை
   கார்திகேயேன் சந்தியில் அந்த
   கார்த்திகைத்  திங்கள்
   காலை வேளையிலே..

*சொர்க்கமே!..
   சொந்தங்கள் சுழற்சியாய்ச் சூழ‌
    உற்றார்
    உயிர்ப்பாய் உடனிருக்க‌
    நண்பர்களோ
    நன்றாய் நல்வாழ்த்துகள் முழங்க‌
    அங்கே ஒரு
    சத்தம் மட்டும்
    சகுணம் தெரியாமல் எனைச்
    சலிபூட்ட‌
    சலைக்காமல் தேடித் தேடி
    சபையிலேச் செல்லச்  செல்ல‌
    சட்டென்று விழித்துவிட்டேன்
    எனையறியாமாலே,
    என் நித்திரை கலைந்துவிட!!!..
    உள்ளமே ஒரு நொடி
    உறைந்துவிட்டது எனக்கு.,
    கன்னி ஒருத்தியை
    காதலித்ததும், கைப்பிடித்ததும் வெரும்
    கனவென்று...

*கவலையோ,
   கணநொடியில் கலைந்துவிட‌
   கள்வன் என்
   காதல் கனவையெண்ணி
   சிரிதாய்ச்
   சிரித்துவிட்டு
   இனியும் இப்படியே
   இருந்துவிடலாமென‌
   கட்டிலில் புகுந்துவிட‌
   அச்சமயம்
   அடித்து எழுப்பினார்
   அலுவலக நண்பரொருவர்
   அழைப்பு வந்ததென,
   அசதியில் அலுவலகத்தில்
   அமர்ந்துகொண்டே
   அரிதாய் தூங்கிய எனை!!!!..
   எனக்குள்ளே தொட்டுப்பார்த்தேன்
   எது உண்மையென?
   நண்பரோ
   நகைத்துகொண்டே
   தொட்டுக்கொடுத்தார் தொலைபேசியை
   தொந்தரவு செய்துவிட்டேனோ என்று.
   அழைப்பில்
    மறுபக்கமோ மனைவி
   மதிய உணவு சாப்பிட்டுவிட்டீங்களா? என்று..
   அக்கணம்தான் நான் எனை
   அறிந்தேன் அவையெலாம்
   கனவுமில்லை கற்பனையுமில்லை
   அலுவலக அலைச்சலில் நான்
   அயர்ந்து இருக்கையில்
   அசைபோட்ட என் நிஜங்களென்று.
   உடனே,
   உணர்வுவந்தவனாய் அழைப்பில்
   மறுபேச்சுக்கு மனைவியிடம்
   மாலையில் மல்லிகையுடன் வருகிறேன்
   என சொல்லி வைத்துவிட்டது
   இருந்த வேலையை
   இனிதே முடித்துவிட்டு
   இல்லறம் நோக்கிச் சென்றேன்
   ஆனந்தமாய்,
   அருகிலிருந்த‌
   அலுவலகத்திலிருந்து!.......

No comments:

Post a Comment